மன்னார்குடி பகுதியில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை


மன்னார்குடி பகுதியில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை
x
தினத்தந்தி 30 July 2018 4:00 AM IST (Updated: 30 July 2018 2:13 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி பகுதியில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தி உள்ளது.

சுந்தரக்கோட்டை,

மன்னார்குடி நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மன்னார்குடியில் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சம்பத் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் நவநீதகிருஷ்ணன் வரவு, செலவு கணக்கினை தாக்கல் செய்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மன்னார்குடியில் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவது தடுக்கப்பட வேண்டும். மன்னார்குடி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க புதிய ஆழ்குழாய் கிணறுகளை நகராட்சி அமைக்க வேண்டும். தூயவளனார் பெண்கள் பள்ளி மற்றும் அரசு மருத்துவமனை எதிரில் வேகத்தடை அமைக்க வேண்டும். நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங் களுக்கு எதிரில் விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும்.

நகரில் உள்ள குளம், ஏரிகளில் நீர் நிரப்ப வேண்டும். பந்தலடியில் போக்குவரத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சொத்து வரி குறைக்கப்பட வேண்டும். பஸ் நிலையங்களை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் சங்க நிர்வாகிகள் நாராயணசாமி, வேலாயுதம், ராமசாமி, தான்யா, மதுரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணைத்தலைவர் பத்மநாபன் நன்றி கூறினார். 

Next Story