பொன்னேரியில் குடிமராமத்து பணிகளை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ஆய்வு
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டியை அடுத்த குருவாலப்பர்கோவில் கிராமத்தில் ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட பொன்னேரி உள்ளது.
மீன்சுருட்டி,
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டியை அடுத்த குருவாலப்பர்கோவில் கிராமத்தில் ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட பொன்னேரி உள்ளது. நடுக்காவேரி வடிநில வட்டத்திற்கு உட்பட்ட இந்த ஏரியில் 2018-19-ம் நிதியாண்டில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.44 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு நான்கு மதகுகளும், மழைக்காலங்களில் உபரி நீர் வெளியேற்றுவதற்கு 24 மீட்டர் நீளமுள்ள ஒரு கலிங்கும், 54 மீட்டர் நீளமுள்ள ரெகுலேட்டரும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் பணியின் விபரம் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மருதையாறு வடிநிலை கோட்ட உதவி செயற்பொறியாளர் சாந்தி, உதவி செயற்பொறியாளர் ராஜாசிதம்பரம் மற்றும் அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் தங்கபிச்சமுத்து, ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம், நகர செயலாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story