தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை


தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை
x
தினத்தந்தி 1 Aug 2018 2:30 AM IST (Updated: 1 Aug 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் விசைப்படகுகள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் விசைப்படகுகள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

கடலுக்கு செல்லவில்லை 

வங்கக்கடலில் பலத்த காற்று வீசக்கூடும், கடல் அலைகள் அதிக உயரத்துக்கு எழக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள சுமார் 245 விசைப்படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

அலைகள் 

தூத்துக்குடி கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக அலைகள் எதிரே வரும் படகுகளை மறைக்கும் அளவுக்கு உயரமாக எழுகின்றன. நேற்று அதிகபட்சமாக மணிக்கு 68 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

தூத்துக்குடியில் நேற்று முழுவதும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. ஆங்காங்கே லேசான சாரல் மழை பெய்தது.


Next Story