அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்


அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்
x
தினத்தந்தி 1 Aug 2018 4:00 AM IST (Updated: 1 Aug 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் அரசு பஸ் டிரைவர் தாக்கப்பட்டார். இதனால் பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருவாரூர்,

திருவாரூர் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று கும்பகோணத்துக்கு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை திருவாரூர் அருகே உள்ள காட்டூரை சேர்ந்த இளங்கோவன் (வயது 52) என்பவர் ஓட்டி சென்றார். அப்போது பஸ்சில் ஏறிய 2 வாலிபர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் டிரைவர் இளங்கோவன் பவித்திரமாணிக்கம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி தகராறில் ஈடுபட்டவர்களை கண்டித்தார்.

இதில் ஆத்திரமடைந்த வாலிபர் டிரைவர் இளங்கோவனை தாக்கி விட்டு பஸ்சில் இருந்து இறங்கி தப்பி சென்றார்.

தாக்குதலில் காயமடைந்த டிரைவர் பஸ்சை தொடர்ந்து இயக்க முடியாமல் அங்கேயே நிறுத்தினார். மேலும் அரசு போக்குவரத்து கழக திருவாரூர் கிளை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் கிளை மேலாளர் சம்பவ இடத்்துக்கு சென்று விசாரணை நடத்தினார். பஸ் டிரைவர் தாக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பயணிகள் மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்த இளங்கோவன் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இளங்கோவன் திருவாரூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரை தாக்கிய வாலிபரை தேடி வருகின்றனர். 

Next Story