சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
சேலம்,
சேலம் இரும்பாலை எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகன் குட்டி என்கிற குமார் (வயது28). முடி திருத்தும் தொழிலாளி. இவர் கடந்த 20.1.2014 அன்று, 6 வயது சிறுமியிடம் சாக்லெட் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி அவரது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இது குறித்து சிறுமியின் பாட்டி, சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மல்லிகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து குட்டி என்கிற குமாரை கடந்த 21.1.2014 அன்று கைது செய்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை சேலம் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
அதில் குற்றம் சாட்டப்பட்ட குட்டி என்கிற குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து, சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து குமாரை போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story