மீன்பிடி தடைகாலம் முடிந்தது இன்று முதல் மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர்


மீன்பிடி தடைகாலம் முடிந்தது இன்று முதல் மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர்
x
தினத்தந்தி 1 Aug 2018 4:00 AM IST (Updated: 1 Aug 2018 2:10 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் மீன்பிடி தடைகாலம் முடிந்தது. இதைத்தொடர்ந்து இன்று முதல் மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர்.

மும்பை, 

மராட்டியத்தில் மீன்பிடி தடைகாலம் முடிந்தது. இதைத்தொடர்ந்து இன்று முதல் மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர்.

மீன்பிடி தடைகாலம்

மராட்டியத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் ஜூலை மாதம் 31-ந் தேதி வரையிலும் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தடை காலம் மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்தது. இதனையடுத்து அன்று முதல் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர்

இதன் காரணமாக மீன்களின் வரத்து குறைந்து, விலை உயர்ந்தது. மீனவர்கள் படகுகள் மற்றும் வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பராமரிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இந்தநிலையில், மீன்பிடி தடை காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று(புதன்கிழமை) அதிகாலை முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்கின்றனர்.

தற்போது மீன்பிடி தடை நீங்கி உள்ள நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் மீன் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story