மனுநீதி நிறைவு நாள் முகாம் 245 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


மனுநீதி நிறைவு நாள் முகாம் 245 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 2 Aug 2018 4:15 AM IST (Updated: 2 Aug 2018 12:51 AM IST)
t-max-icont-min-icon

மனுநீதி நிறைவு நாள் முகாமில் 245 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட சத்திரமனை கிராமத்தில் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி தலைமை தாங்கினார். தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். முகாமில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல துறைகள் சார்ந்த திட்டங்கள் குறித்து, இத்திட்டங்கள் மூலமாக பொதுமக்கள் பயன்பெறுவதற்குண்டான வழிமுறைகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து முகாமில் 121 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள், 10 பயனாளிகளுக்கு ரூ.82 ஆயிரம் திருமண உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள், இயற்கை மரண உதவித்தொகை, முதியோர் மற்றும் இதர உதவித்தொகைகளும், புதிய மின்னணு குடும்ப அட்டைகளும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 2 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் உள்பட மொத்தம் 245 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 53 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.

இதில் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் மனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் பாண்டியன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயராமன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மஞ்சுளா, வட்டாட்சியர்கள் பாரதிவளவன், செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story