அடிக்கடி பழுதாகி பாதி வழியில் நிற்கும் அரசு பஸ் மாணவர்கள் தள்ளிச்செல்லும் அவலம்


அடிக்கடி பழுதாகி பாதி வழியில் நிற்கும் அரசு பஸ் மாணவர்கள் தள்ளிச்செல்லும் அவலம்
x
தினத்தந்தி 2 Aug 2018 4:00 AM IST (Updated: 2 Aug 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

மணமேல்குடியில் அடிக்கடி பழுதாகி பாதி வழியில் நிற்கும் அரசு பஸ்சை மாணவர்கள் தள்ளி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மணமேல்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே உள்ள விச்சூர், வெள்ளூர், மணக்காடு, கரவாட்டங்குடி, மணலூர், கீரனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மணமேல்குடி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு தினசரி அரசு பஸ்சில் சென்று படித்து வருகின்றனர். ஆவுடையார்கோவிலிருந்து புறப்பட்டு இந்த அரசு பஸ் மேலே குறிப்பிட்டுள்ள கிராமங்களை சுற்றி வந்து மணமேல்குடிக்கு தினசரி காலையில் செல்லும். இதில் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த பஸ்சில் எப்போது கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த பஸ் தினமும் ஏதாவது பழுது ஏற்பட்டு பாதி வழியில் நின்று விடுவது வழக்கமாக உள்ளது. அப்போது மாணவர்கள் நடந்தே பள்ளிக்கு செல்கின்றனர் .மேலும் குறுகலான சாலையில் பஸ் பழுதாகி நின்றால் அதனை ஓரம்கட்டி நிறுத்துவதற்காக அந்த பஸ்சை மாணவர்களே தள்ளி சென்று நிறுத்துகின்றனர். இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு மாணவர்கள் பள்ளிக்கு செல்லமுடியாதநிலை ஏற்படுகிறது .எனவே பள்ளி மாணவர்கள் நலன் கருதி போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆவுடையார்கோவிலிலிருந்து மணமேல்குடிக்கு புதிய பஸ் இயக்குமாறும், மேலும் காலை நேரத்தில் கூடுதல் பஸ் இயக்குமாறும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story