குமரி மாவட்டத்தில் தொடர் மழை: திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு

குமரி மாவட்டத்தில் தொடர் மழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கடந்த மாதம் 30-ந் தேதி இரவு தொடங்கிய மழை விடிய, விடிய பெய்தது. மறுநாளும் விட்டு, விட்டு மழை பெய்தது. இந்த கனமழையால் ஆறுகள், வாய்க்கால்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அணைப்பகுதியிலும் கனமழை பெய்தது. தக்கலை, கோழிப்போர்விளை பகுதிகளில் 15 செ.மீ. அளவுக்கு மழை பதிவாகி இருந்தது. இந்தநிலையில் சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் நேற்றுமுன்தினம் 15.28 அடியாக இருந்தது. தொடர்ந்து நீர்வரத்து இருந்ததாலும், மழை தொடர்ந்து பெய்ததாலும் இந்த அணையில் இருந்து நேற்று முன்தினம் மாலை 4 மணியில் இருந்து வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் உபரிநீர் கால்வாய் வழியாக திறந்து விடப்பட்டது.
ஆனால் நேற்று பகலில் மழை இல்லை. இருப்பினும் வானம் மப்பும், மந்தாரமுமாக காட்சி அளித்தது. நீர்வரத்து அதிகமாக இருந்த போது சிற்றாறு-1 அணையில் இருந்து திறந்து விடப்பட்ட 250 கன அடி தண்ணீர், மழை குறைந்ததால் நேற்று அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீராக குறைக்கப்பட்டது.
இந்த மழையினால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 2,394 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 658 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் நேற்று முன்தினம் 17.80 அடியாக இருந்த இந்த அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 19.80 அடியாக உயர்ந்தது.
இதேபோல் பெருஞ்சாணி அணைக்கு 1,229 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சிற்றார்-1 அணைக்கு 469 கன அடி தண்ணீரும், சிற்றார்-2 அணைக்கு 327 கன அடி தண்ணீரும், பொய்கை அணைக்கு 2 கன அடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு 43 கன அடி தண்ணீரும் வந்தது. மாம்பழத்துறையாறு அணை நிரம்பியிருப்பதால் இந்த அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்படுகிறது.
நேற்று முன்தினம் பெய்த மழையினால் குமரி மாவட்டத்தில் 5 குடிசைகள் பகுதி அளவு சேதம் அடைந்திருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தாழக்குடி பகுதியில் உள்ள ஒரு குளத்தின் பக்கச்சுவர் சரிந்து நீர்க்கசிவு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக அதனை சரி செய்தனர்.
இதேபோல் பறக்கை அருகே குளத்துவிளை பகுதியில் கால்வாய்கள் அடைக்கப்பட்டு இருந்ததால் அப்பகுதியில் உள்ள குளத்தின் அருகே 1 அடி வரை தண்ணீர் தேங்கி நின்றது. அதுவும் சரிசெய்யப்பட்டதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர் மழை மற்றும் சிற்றார்-1 அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளதால் நேற்று திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியில் அதிக அளவில் தண்ணீர் கொட்டுவதால் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் ரெமா தேவி, திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தார். இதற்கான அறிவிப்பு பேனர் அருவிக்கு செல்லும் பாதையில் கட்டி வைக்கப்பட்டிருந்தது. இதனால், நேற்று அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் அருவியின் அருகே செல்ல முடியாமல், அதன் அழகை தொலைவில் நின்று ரசித்து விட்டு சென்றனர்.
அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டதையொட்டி ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டது. குழித்துறை பகுதியில் சைரன் ஒலிக்கச் செய்து மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது.
குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. குழித்துறையில் தடுப்பணை மீது உள்ள சப்பாத்து பாலம் மூழ்கடித்த நிலையில் வெள்ளம் பாய்ந்ததால், அந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், சப்பாத்து பாலத்துக்குள் யாரும் நுழையாதபடி இரும்பு கம்பி மூலம் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது.
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-
பேச்சிப்பாறை- 73, பெருஞ்சாணி- 31, சிற்றார் 1-56, சிற்றார் 2- 30, பொய்கை- 4.6, மாம்பழத்துறையாறு- 16, புத்தன் அணை- 32.8, பூதப்பாண்டி-15.2, களியல்- 4.3, கன்னிமார்- 46.2, கொட்டாரம்- 5.6, குழித்துறை- 23, மயிலாடி- 14.2, நாகர்கோவில்- 10.4, சுருளகோடு- 31, பாலமோர்- 27.4, ஆரல்வாய்மொழி- 4.6, கோழிப்போர்விளை- 19, அடையாமடை- 22, குருந்தங்கோடு- 6.8, முள்ளங்கினாவிளை- 28, ஆனைக்கிடங்கு- 11, தக்கலை- 16 என்ற அளவில் பதிவாகி இருந்தது.

Related Tags :
Next Story