நாகர்கோவிலில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ரத்ததான முகாம்


நாகர்கோவிலில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ரத்ததான முகாம்
x
தினத்தந்தி 3 Aug 2018 4:00 AM IST (Updated: 2 Aug 2018 8:30 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. முகாமை நீதிபதி ஜாண் ஆர்.டி.சந்தோசம், கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நாகர்கோவில்,

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் உருவான தினம் இன்று (வெள்ளிக்கிழமை) ஆகும். இதையொட்டி குமரி மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள சங்க கட்டிடத்தில் நேற்று ரத்ததான முகாம் நடந்தது.

முகாமுக்கு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கோலப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். ரத்ததான முகாமை மாவட்ட மகிளா கோர்ட்டு நீதிபதி ஜாண் ஆர்.டி.சந்தோசம், மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ரத்தவங்கி அதிகாரி கரோலின் கீதா உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடம் இருந்து ரத்தம் தானமாக பெற்றனர். முகாமில் 30–க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, பத்மநாபபுரம் உதவி கலெக்டர் ராஜகோபால் சுங்காரா, நாகர்கோவில் கோட்டாட்சியர் ஜானகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகன்யா, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் பார்த்திபன் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story