கொல்லிமலை வல்வில் ஓரி விழாவில் மலர் கண்காட்சி சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்
கொல்லிமலையில் வல்வில் ஓரிவிழாவை முன்னிட்டு மலர் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இதை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நேற்று வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு அங்குள்ள தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இதில் பார்வையாளர்களை கவரும் வகையில் காய்கறி அலங்காரமும் இடம்பெற்று இருந்தன.
இதையொட்டி அங்குள்ள கண்ணாடி மாளிகையில் ஜெர்பிரா, லில்லியம், டெய்சி, ஆந்தூரியம், கிரைசாந்திமம், லைமோனியம், அரிக்கா, மகாத்மா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் கொண்டு மலர் படுக்கை மற்றும் கொய்மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
10 அடி உயரத்தில் அஸ்பிராகஸ், ரோஜா, கிரைசாந்திமம், டெய்சி போன்ற மலர்களால் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இது சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்தது.
அத்துடன் ஜெர்பிரா, ரோஜா, டெய்சி, கார்னேசன் போன்ற பூக்கள் கொண்டு ‘செல்பி’ எடுப்பதற்கு என்று தனியாக அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது. பூங்காவுக்கு வந்தவர்கள் இந்த அமைப்பு முன்பு நின்று உற்சாகமாக தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து கொண்டதை காண முடிந்தது.
இதேபோல் கத்தரி, செர்ரி பழம் கொண்டு ஸ்பைடர்மேன் உருவம் செய்யப்பட்டு இருந்தது. இது சிறுவர், சிறுமிகளை மிகவும் கவர்ந்தது. தலா 80 கிலோ எடை கொண்ட திராட்சை பழங்கள் கொண்டு 2 யானை உருவம் அமைத்து இருந்தனர்.
மேலும் பாகற்காய் கொண்டு 5 அடி நீளத்தில் முதலை, பூசணிக்காய், கேரட் மற்றும் பீட்ரூட் கொண்டு 7 அடி நீளத்தில் டிராகன் போன்றவை வடிவமைக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. காய்கறிகள் கொண்டு செய்யப்பட்டு இருந்த வாத்து, கொக்கு, பென்குயின் உருவங்கள் மிகவும் தத்ரூபமாக காட்சி அளித்தது. இவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
இந்த மலர் கண்காட்சியை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் சந்திரசேகரன் எம்.எல்.ஏ. மற்றும் அரசு அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் சென்று மலர் கண்காட்சியை கண்டு ரசித்தார். இந்த கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகளும் பார்வையிட்டு கண்டு களித்தனர்.

Related Tags :
Next Story