ஆடிப்பெருக்கு விழாவை பொதுமக்கள் பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்


ஆடிப்பெருக்கு விழாவை பொதுமக்கள் பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 3 Aug 2018 4:00 AM IST (Updated: 3 Aug 2018 3:08 AM IST)
t-max-icont-min-icon

ஆடிப்பெருக்கு விழாவை பொதுமக்கள் பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதிகளிலுள்ள பொதுமக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள ஆடிப்பெருக்கு விழாவை பாதுகாப்போடு கொண்டாட வேண்டும். அவ்வாறு கொண்டாடும்போது தங்கள் குழந்தைகள் மீது அதிக கண் காணிப்பு செலுத்த வேண்டும். நீச்சல் தெரியாதவர்கள் ஆற்றில் இறங்க வேண்டாம். ஆற்றுக்குள் நின்று செல்பி புகைப்படங்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். காவிரி கரையோர பகுதிகளில் பயன்பாட்டிலுள்ள படித்துறைகளில் பொதுமக்களை எச்சரிக்கும் வகையில் ஆழமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும், புதைகுழி எச்சரிக்கை செய்யப்பட்ட பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஒலிபெருக்கி மூலமும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் தொடர்ந்து அறிவிப்பு செய்யப்பட்டு வருகின்றது.

மேலும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் உதவிக்கு தீயணைப்பு துறையினர், அந்தந்த பகுதியிலுள்ள நீச்சல் தெரிந்த வீரர்கள் தயாராக இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தகவல் களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். எனவே எந்தவித அசம்பாவித சம்பவங் களுக்கும் இடமளிக்காத வகையில் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடனும், விழிப்புணர்வுடனும் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Next Story