கன்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்: அரசு பஸ் கண்டக்டர் பலி கோவில்பட்டியில் பரிதாபம்
கோவில்பட்டியில் சாலையோரம் நின்ற கன்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் உயிரிழந்தார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் சாலையோரம் நின்ற கன்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் உயிரிழந்தார்.
அரசு பஸ் கண்டக்டர்கோவில்பட்டி– எட்டயபுரம் ரோடு சண்முக நகரைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 45). இவர் கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று காலையில் வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றார்.
கோவில்பட்டி–எட்டயபுரம் ரோடு தொழிற்பேட்டை பகுதியில் சென்றபோது, அங்கு சாலையோரம் நின்ற கன்டெய்னர் லாரி மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த ராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
டிரைவர் கைதுஇதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் இறந்த ராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கன்டெய்னர் லாரியில் எச்சரிக்கை விளக்குகள் போடாமல், சாலையோரம் அஜாக்கிரதையாக நிறுத்தியதாக, அந்த லாரியின் டிரைவரான தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சேர்ந்த மாடசாமி மகன் சக்திவேலை (46) போலீசார் கைது செய்தனர்.