குவைத்தில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.14 லட்சம் தங்கம் சிக்கியது


குவைத்தில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.14 லட்சம் தங்கம் சிக்கியது
x
தினத்தந்தி 5 Aug 2018 4:00 AM IST (Updated: 5 Aug 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் ரூ.14 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு நேற்று குவைத்தில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னையைச்சேர்ந்த பேகம்(வயது 43) என்ற பெண், சுற்றுலா விசாவில் குவைத் சென்றுவிட்டு திரும்பி வந்து இருந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரது சூட்கேசை சோதனை செய்தனர். அதில் 4 தங்க வளையல்களும், ஒரு சிறிய தங்க கட்டியையும் மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

அவரிடம் இருந்து ரூ.14 லட்சம் மதிப்புள்ள 460 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள். மேலும் அந்த தங்கத்தை அவர், குவைத்தில் இருந்து யாருக்காக சென்னைக்கு கடத்தி வந்தார்?. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என பேகத்திடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story