வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது


வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
x
தினத்தந்தி 5 Aug 2018 2:30 AM IST (Updated: 5 Aug 2018 1:17 AM IST)
t-max-icont-min-icon

வடக்கன்குளம் சின்ன ரோமாபுரி பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

வடக்கன்குளம், 

வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கொடியேற்றம்

நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தில் திருக்குடும்ப பரிசுத்த புதுமை பரலோக ஆன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.

திருவிழா நாட்களில் தினமும் காலை 5 மணி, 6.15 மணி, 7.15 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு மறையுரை, நற்கருணை ஆசீரும், மதியம் 12 மணி, மாலை 3 மணிக்கு ஜெபமாலையும் நடைபெறும்.

சிறப்பு திருப்பலி

9-ம் திருவிழாவான வருகிற 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி ஆயர் இவான் அம்புரோஸ் தலைமையில் மாலை ஆராதனை நடக்கிறது. 10-ம் திருவிழாவான 15-ந்தேதி (புதன்கிழமை) காலை 5 மணிக்கு பெருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது.

திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு பஸ் வசதி, தண்ணீர் வசதி, பாதுகாப்பு வசதி உள்ளிட்டவை செய்யப்பட்டு உள்ளன. திருவிழாவை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு பாவசங்கீர்த்தனமும், நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அருட்தந்தையர்கள் ஜான் பிரிட்டோ, கிங்ஸ்டன் ஆகியோர் தலைமையில், அருட்சகோதரிகள், பங்குப்பேரவை மற்றும் இறைமக்கள் செய்து வருகின்றனர்.


Next Story