நடிகர் ரஜினிகாந்த் விரைவில் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் அண்ணன் சத்தியநாராயணா பேட்டி
‘நடிகர் ரஜினிகாந்த் விரைவில் முழுநேர அரசியலில் ஈடுபடுவார்’ என்று அவரது அண்ணன் சத்தியநாராயணா தெரிவித்தார்.
திருப்பத்தூர்,
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆண்டியப்பனூர் கிராமத்தில் உள்ள பாப்பாத்தியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி விழா நடைபெற்றது. விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயணா தனது குடும்பத்தினருடன் வருகை தந்து, சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரஜினிகாந்த் நடித்து கொண்டிருக்கும் புதிய படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இமாசல பிரதேசத்தில் நடந்து முடிந்து விட்டது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது. ரஜினிகாந்த் விரைவில் முழு நேர அரசியலில் ஈடுபடுவார். இதனை யாராலும் தடுக்க முடியாது. தமிழக மக்கள் ஆதரவுடன் ரஜினிகாந்த் முதல்-அமைச்சர் ஆவார்.
ரஜினிகாந்த் மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரியில் எங்களது தாய்-தந்தைக்கு கோவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா விரைவில் நடைபெற உள்ளது. அதில் ரஜினிகாந்த் கலந்து கொள்வார். 2.0 படம் முழுவதும் முடிவடைந்து நவம்பர் மாதம் 29-ந் தேதி வெளிவர உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது திருப்பத்தூர் ரஜினிகாந்த் மக்கள் மன்ற இணை செயலாளர் கே.ஆதேஷ்குமார், ஒன்றிய செயலாளர் மணிகண்டன், செயற்குழு உறுப்பினர் குணசேகரன் உள்பட பலர் இருந்தனர்.

Related Tags :
Next Story