ஆச்சரியப்படுத்தும் அதிசய சிறுமி
14 வயதாகும் ஜன்ஹவி என்ற சிறுமி ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுபவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி கொடுக்கிறார்.
அரியானாவை சேர்ந்த ஜன்ஹவி அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறார். இப்போதே டெல்லி பல்கலைக்கழகம், ஜன்ஹவி கல்லூரி படிப்பில் சேர அனுமதித்திருக்கிறது. பள்ளி படிப்புக்கு இடையே கல்லூரி இரண்டாவது ஆண்டு படிப்பிலும் கவனம் செலுத்திவருகிறார்.
இந்தியை தவிர ஆங்கிலம், பிரெஞ்ச் உள்பட 8 வெளிநாட்டு மொழிகளும் கற்றிருக்கிறார். ஜன்ஹவி மற்ற சிறுவர்-சிறுமி களுடன் ஒப்பிடும்போது சிறு வயதிலேயே பலவகை தனித் திறன்களில் ஜொலிக் கிறார். அதுபற்றி அவரது தந்தை பிரிஜ் மோகன் பன்வார் சொல்கிறார்:
‘‘எனது மகள் சிறுவயதிலேயே 500 ஆங்கில வார்த்தைகளை வாசிக்க பழகிவிட்டாள். அதனால் மழலையர் பள்ளியில் சேர்க்காமல் தொடக்கப் பள்ளியில் சேர்ந்தேன். நன்றாக படித்ததால் ஒரே கல்வி ஆண்டில் இரண்டு வகுப்புகளை படித்து முடிப்பதற்கு பள்ளி நிர்வாகம் சிறப்பு அனுமதி வழங்கியது’’ என்கிறார். ஜன்ஹவி மொழிப் புலமையை மேம்படுத்து வதற்காக வீடியோ காட்சிகளை பதிவேற்றம் செய்து கொடுத்து ஊக்கப் படுத்தி வருகிறார்கள்.
‘‘வீடியோவை கூர்ந்து கவனித்து அதில் பேசுபவர் போலவே தானும் பேசுவதற்கு பழகிவிடுவாள். ஒருமுறை டி.வி. செய்தி வீடியோவை பதிவேற்றம் செய்து கொடுத்தேன். சில மணி நேரம் அதனையே கவனித்தவள் அந்த செய்தியாளர் எப்படி முகபாவனையுடன் பேசுகிறாரோ அதேபோல் பேசி ஆச்சரியப்படுத்திவிட்டாள்’’ என்கிறார்.
வெளிநாட்டு மொழிகளை கற்க வேண்டும் என்பது ஜன்ஹவியின் விருப்பமாக இருக்கிறது. அதற்காக பள்ளிக்கூடத்தில் இருந்து வீடு திரும்பியதும் சிறப்பு வகுப்புகளுக்கு செல்கிறார். ஐ.ஏ.எஸ். தேர்வர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தன்னம்பிக்கை வகுப்புகளையும் நடத்தி வருகிறார். பாடகி அவதாரமும் எடுத்திருக்கிறார். பி.பி.சி. செய்திவாசிப்பாளராக வேண்டும் என்பது தான் அவருடைய விருப்பமாக இருக்கிறது. அதற்காக இதழியல் பாடத்தையும் தேர்ந்தெடுத்து படித்துவருகிறார்.

Related Tags :
Next Story