தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டது சுவாமிமலையில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேட்டி


தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டது சுவாமிமலையில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 6 Aug 2018 4:45 AM IST (Updated: 5 Aug 2018 11:18 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டது என சுவாமிமலையில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

கபிஸ்தலம்,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் உள்ள தனியார் விடுதியில், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணையும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் கலந்து கொண்ட டி.டி.வி.தினகரன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–


தமிழகத்தில் சத்துணவு முட்டையில் தொடங்கி மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது வரை ஊழல் மலிந்து விட்டது. எதை எடுத்தாலும் ஊழல் என்கிறார்கள்.

ஜெயலலிதாவின் பெயரை சொல்லி ஆட்சி செய்யும் இவர்கள் அவருடைய கொள்கையில் இருந்து தடம் மாறி செல்கின்றனர். சுயநல கும்பலின் ஆட்சி விரைவில் அகற்றப்பட வேண்டும். குறிப்பாக மக்கள் விரோத நடவடிக்கைகளை கையாண்டு வரும் இந்த ஆட்சி, தேர்தல் மூலமாக விரைவில் அகற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story