மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது


மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது
x
தினத்தந்தி 6 Aug 2018 3:00 AM IST (Updated: 6 Aug 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சின்னக்கட்டளையை சேர்ந்தவர் மாரியப்பன்.

பேரையூர்,

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சின்னக்கட்டளையை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது40).இவருடைய மனைவி முத்து (36).இவர்களுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.மாரியப்பன் குடிப்பழக்கத்திற்கு ஆளாகியதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் முத்து தனது குழைந்தைகளுடன் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.இந்த நிலையில் மாரியப்பன் மனைவி முத்துவிடம் சென்று இடப்பத்திரத்தை கேட்டு பிரச்சினை செய்து உள்ளார்.இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு மாரியப்பன் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து மனைவி முத்துவை குத்தி விட்டு ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர், உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளார். அங்கு சிகிச்சையில் இருந்தவரிடம் சேடபட்டி போலீசார் வாக்குமூலம் பெற்று வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர்.


Next Story