மாவட்ட செய்திகள்

லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு + "||" + Truck-motorcycle clash; The young man dies

லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு

லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர், திருவள்ளூர் ஜே.என். சாலையை சேர்ந்தவர் வடிவேலு. இவரது மகன் தினேஷ் (வயது 24). நேற்று முன்தினம் தினேஷ் வேலையின் காரணமாக ஆயில் மில் பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திருத்தணி நோக்கி வந்த கன்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் தினேஷ் படுகாயம் அடைந்தார். அங்கு இருந்தவர்கள் தினேஷை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வடிவேலு திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. மோட்டார் சைக்கிள் மீது லாரி கவிழ்ந்தது; உடல் நசுங்கி வாலிபர் பலி
நெல்லிக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் லாரியின் இடிபாட்டிற்குள் சிக்கி உடல்நசுங்கி பலியானார்.
2. டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது; வாலிபர் பலி
கல்வராயன்மலையில் நிலத்தை சமன் செய்தபோது டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்ததில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.