விற்பனைக்கூடத்துக்கு வரும் விவசாயிகள் வங்கி கணக்கு புத்தக நகலை கொண்டு வரவேண்டும்


விற்பனைக்கூடத்துக்கு வரும் விவசாயிகள் வங்கி கணக்கு புத்தக நகலை கொண்டு வரவேண்டும்
x
தினத்தந்தி 6 Aug 2018 9:45 PM GMT (Updated: 6 Aug 2018 6:55 PM GMT)

செஞ்சி வேளாண் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்துக்கு வரும் விவசாயிகள் தங்களது வங்கி கணக்கு புத்தகத்தின் நகலை கொண்டு வரவேண்டும் என்று ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

செஞ்சி, 


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

செஞ்சி வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் மூலம் விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்கள் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் தாங்கள் கொண்டு வரும் பொருட்களின் விலையை கைபேசி மூலம் அறிந்திடவும், விலை திருப்தி இல்லையென்றால் கைபேசி வாயிலாகவே நிறுத்தம் செய்து கொள்ளலாம். மேலும் விற்பனை தொகை வங்கி கணக்கில் வரவு செய்யப்பட்டதை கைபேசி வாயிலாகவே அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் தாங்கள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு காலையில் வரும்போதே, தங்களது வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் கைபேசி எண் ஆகியவற்றை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொடுத்து பயன்பெற வேண்டும். மேற்கண்ட ஆவணங்களை வழங்காத விவசாயிகளின் விளைபொருட்கள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விற்பனை செய்ய முடியாது. இவ்வாறு மேற்கண்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Next Story