மாவட்ட செய்திகள்

நல்லம்பள்ளி அருகே மதுக்கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் + "||" + Women's struggle to besiege the barbecue at Nallamallai

நல்லம்பள்ளி அருகே மதுக்கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்

நல்லம்பள்ளி அருகே மதுக்கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
நல்லம்பள்ளி அருகே மதுக்கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நல்லம்பள்ளி,

நல்லம்பள்ளி அடுத்த அதியமான்கோட்டை ஊராட்சிக்குட்பட்டது வடக்குதெரு கொட்டாவூர் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள், அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் நல விடுதி மற்றும் அரசு பள்ளிகள், தனியார் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவை உள்ளது.


இந்த நிலையில் நேற்று ஊரின் மையப்பகுதியில் மதுக்கடை திறக்கப்பட்டதாக கூறப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பெண்கள் அந்த மதுக்கடை முன்பு திரண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு இங்கு மதுக்கடை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அறிந்த அதியமான்கோட்டை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுங்கள் என பொதுமக்களிடம் போலீசார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பின்னர் அந்த மதுக்கடை திறக்கப்பட்டு விற்பனை நடந்தது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் மதுக்கடை திறந்ததை கண்டிக்கிறோம். இப்பகுதியில் பள்ளி, கல்லூரி, மாணவர் நல விடுதி உள்ளிட்டவைகள் உள்ளன. இங்கு மதுக்கடை திறந்துள்ளதால் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகும். எனவே, பெண்களின் நலன்கருதி இங்கு அமைக்கப்பட்டுள்ள மதுக்கடையை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் மதுக்கடையை மூடும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகை
குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
2. மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் கோரிக்கைகளை விளக்கி பெண்கள் ஒப்பாரி
மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை விளக்கி பெண்கள் ஒப்பாரி வைத்தனர்.
3. மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேசியவாத காங்கிரசார் போராட்டம்
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேசியவாத காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் பா.ஜனதா அலுவலகம் மீது கேரட்டை வீசியதால் பரபரப்பு உண்டானது.
4. புதுக்கடை அருகே சித்த மருத்துவ கல்லூரி மாணவ–மாணவிகள் திடீர் போராட்டம்
புதுக்கடை அருகே முன்சிறை சித்த மருத்துவ கல்லூரி மாணவ–மாணவிகள் திடீரென போராட்டம் நடத்தினர்.
5. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: நாகை உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை 80 பேர் கைது
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதில் 80 பேரை போலீசார் கைது செய்தனர்.