மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் வேலை தேடி சென்னை வந்த என்ஜினீயர் விபத்தில் சிக்கி சாவு + "||" + Motorcycle Job search Engineer who came to Chennai Accident deaths

மோட்டார் சைக்கிளில் வேலை தேடி சென்னை வந்த என்ஜினீயர் விபத்தில் சிக்கி சாவு

மோட்டார் சைக்கிளில் வேலை தேடி சென்னை வந்த என்ஜினீயர் விபத்தில் சிக்கி சாவு
நாகை மாவட்டத்தில் இருந்து வேலை தேடி மோட்டார் சைக்கிளில் சென்னை வந்த என்ஜினீயர் ஊருக்கு திரும்பும்போது தாம்பரம் அருகே பழுதான லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சிக்கி பலியானார்.
தாம்பரம்,

நாகை மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது ரபீக். இவரது மகன் முகமது இம்தியாஸ் (வயது 27). இவர் என்ஜினீயரிங் படித்துவிட்டு வேலை தேடி வருகிறார். கடந்த சனிக்கிழமை இவர் வேலை தேடுவதற்காக அவரது மோட்டார் சைக்கிளில் சென்னை வந்தார்.


பின்னர் அவர் நேற்று மீண்டும் ஊருக்கு திரும்புவதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

தாம்பரம் மதுரவாயல் பைபாஸ் சாலையில் தாம்பரம் நோக்கி அவர் மோட்டார் சைக்கிளில் வந்தபோது, தாம்பரம் சி.டி.ஓ. காலனி அருகே பைபாஸ் சாலையில் பழுதாகி நின்றுகொண்டிருந்த லாரி மீது அவரது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த முகமது இம்தியாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.