மாவட்ட செய்திகள்

செங்கத்தில் ஆசிரியர் வீட்டில் 1¼ லட்சம் திருட்டு + "||" + The brick teacher's house is 1 lakh lakhs

செங்கத்தில் ஆசிரியர் வீட்டில் 1¼ லட்சம் திருட்டு

செங்கத்தில் ஆசிரியர் வீட்டில் 1¼ லட்சம் திருட்டு
செங்கத்தில் ஆசிரியர் வீட்டில் 1¼ லட்சத்தை திருட்டி சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்கம்,

செங்கம் செந்தமிழ் நகரை சேர்ந்தவர் பென்னி (வயது 57), அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பினார்.

வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கபட்டு வீட்டில் பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் திருட்டு போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் செங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.