மாவட்ட செய்திகள்

தர்மபுரியில் மாநில சப்-ஜூனியர் இறகுபந்து போட்டி 1200 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு + "||" + The state sub-junior tricolor competition in Dharmapuri participates in 1200 players

தர்மபுரியில் மாநில சப்-ஜூனியர் இறகுபந்து போட்டி 1200 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு

தர்மபுரியில் மாநில சப்-ஜூனியர் இறகுபந்து போட்டி 1200 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு
மாநில அளவிலான சப்-ஜூனியர் இறகுபந்து போட்டி தர்மபுரியில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் 1200 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்று விளையாடுகிறார்கள்.
தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட இறகுபந்து சங்கம் சார்பில் மாநில அளவிலான சப்-ஜூனியர் தர வரிசைக்கான இறகுப்பந்து போட்டிகள் தர்மபுரியில் உள்ள மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறும் இந்த போட்டிகளின் தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு சங்க தலைவர் ஜெ.தண்டபாணி தலைமை தாங்கினார். செயலாளர் கே.தனசேகர் வரவேற்று பேசினார். பொருளாளர் ஆர்.கோபி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் ஆகியோர் கலந்து கொண்டு மாநில அளவிலான இறகுபந்து போட்டிகளை தொடங்கி வைத்தனர். அப்போது வீரர்-வீராங்கனைகள் அறிமுகம் செய்யப்பட்டனர்.

இந்த போட்டியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த 900 வீரர்களும், 300 வீராங்கனைகளும் என மொத்தம் 1,200 பேர் பங்கேற்று உள்ளனர். தரவரிசை அடிப்படையில் வீரர்-வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுவதால் முதல் 3 நாட்கள் தகுதிசுற்று போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதைத்தொடர்ந்து பிரதான சுற்று போட்டிகள் நடக்கின்றன. வருகிற 12-ந்தேதி இறுதிப்போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்-வீராங்கனைகளுக்கு அன்று மாலை பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கும் விழா நடக்கிறது.