மாவட்ட செய்திகள்

வடகாடு முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம் + "||" + Kumbabhishek's work in Vadakkagu Muthuramaniyan temple is intensifying

வடகாடு முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்

வடகாடு முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
வடகாடு முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், வடகாட்டில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்து பெரிய கல்மண்டபம், ராஜகோபுரம் அமைக்க வேண்டும் என்று கிராம மக்களால் முடி வெடுக்கப்பட்டு திருப்பணிகள் தொடங்கியது. கிராம மக்களின் ஒத்துழைப்பு மற்றும் பலரின் நிதி உதவிகளுடன் திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கோத்த முத்துப்பட்டியை சேர்ந்த குழுவினரின் கட்டுமானப்பணிகளில் கோவில் கோபுரத்தில் 70 சிலைகள், முன்னால் உள்ள கல் மண்டபத்தில் 17 சிலைகள் மற்றும் 30 தூண்களுடன் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கல் மண்டபத்தில் ராசிகளுக்கான சிற்பங்கள், கல் சங்கிலிகள், மற்றும் கல் சிற்பங்களும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல கோவில் முன்பு புதிதாக அமைக்கப்பட்டுள்ள 55 அடி உயர ராஜகோபுரத்தில் 194 சிமெண்டு சிலைகளும், சுற்றுச்சுவரில் 12 சிற்பங்களும் என ஏராளமான சிலைகள், சிற்பங்களுடன் திருப்பணிகள் நடந்து முடிந்துள்ளது.


திருப்பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் வருகிற 23-ந்தேதி (வியாழக் கிழமை) கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்களால் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அதற்கான பணிகளில் விழாக்குழுவினர் தீவிரமாக உள்ளனர். கடந்த வாரம் பந்தல்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கி கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. யாகசாலை அமைக்கும் பணிகளும், அன்னாதானம் வழங்க பந்தல் அமைத்தல் போன்ற பணிகளும் நடந்து வருகிறது. இந்த கும்பாபிஷேகத்தில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தை மறுசீராய்வு செய்யாவிட்டால் தமிழகத்திலும் போராட்டம் வெடிக்கும்; இந்து முன்னணி மாநில தலைவர் பேட்டி
சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தை மறு சீராய்வு செய்யாவிட்டால் தமிழகத்திலும் போராட்டம் வெடிக்கும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கூறினார்.
2. குருவித்துறை கோவிலில் கைவரிசை காட்டிய கும்பல் விரைவில் கைது: ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் பேட்டி
“குருவித்துறை பெருமாள் கோவிலில் கைவரிசை காட்டிய கும்பலை விரைவில் கைது செய்வோம், கொள்ளை போன சிலைகளை விரைவாக மீட்டது இதுவே முதல்முறை“ என்று ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கூறினார்.
3. திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் 50–க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் கோவிலின் வெளிக்குளத்தை ஒட்டிய பகுதியில் ஆக்கிரமித்து இருந்த ஏராளமான கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.
4. குருவித்துறை கோவிலில் சிலைகள் கொள்ளை: ஐ.ஜி.பொன். மாணிக்கவேல் இன்று விசாரணை
சோழவந்தான் குருவித்துறை கோவிலில் சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டதை தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் இன்று விசாரணை மேற்கொள்கிறார்.
5. மதுரை அருகே குருவித்துறை பெருமாள் கோவிலில் 4 ஐம்பொன் சிலைகள் கொள்ளை
மதுரை சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை பெருமாள் கோவலில் 4 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது.