மாவட்ட செய்திகள்

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம்: நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடைகள் அடைப்பு பஸ்கள் ஓடவில்லை + "||" + DMK Chairman Karunanidhi's death: Shops are not running in shops in Nagai and Tiruvarur districts

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம்: நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடைகள் அடைப்பு பஸ்கள் ஓடவில்லை

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம்: நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடைகள் அடைப்பு பஸ்கள் ஓடவில்லை
தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணமடைந்ததையொட்டி நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் பஸ்கள் ஓடவில்லை.

திருவாரூர்,

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்–அமைச்சருமான மு.கருணாநிதி உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை 6.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி கருணாநிதி மரணமடைந்தார்.

இந்த தகவல் அறிந்ததும் திருவாரூர் நகரமே சோகத்தில் முழ்கியது. இதனையடுத்து திருவாரூரில் உள்ள கடைகள் அனைத்து அடைக்கப்பட்டன. பஸ்கள் ஓடவில்லை. எந்த நேரத்திலும் பரபரப்பான காணப்படும் காய்கறி மார்கெட், நகை கடை சந்து அனைத்து மூடப்பட்டதால் மக்கள் நடமாட்டம் இன்றி கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டன.

அரசு பஸ்கள் அனைத்து திருவாரூர் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் செய்து அறியாமல் திகைத்தனர். பஸ்கள் எதுவுமின்றி பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டமாக காட்சியளித்தது. சினிமா தியேட்டர்கள் இரவு காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகளில் இருந்து மாணவ–மாணவிகள் முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டனர். டாஸ்மாக் கடைகள் அனைத்து 6 மணிக்கு மூடப்பட்டன. தெரு விளக்குகள் அனைத்து சற்று செயல் இழந்து நகரமே இருளில் முழ்கியது. இதே போல திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ்கள் ஓடவில்லை. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.

பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகன ஓட்டிகள் அலைமோதியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் அனைவரும் ரெயிலில் சென்றனர். இதனால் ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. பலர் ரெயில் டிக்கெட் எடுக்க முடியாமல் திணறினர். எந்தவித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் அனைத்து இடங்களிலும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சொந்த ஊர் திருவாரூர் என்பதால், அவருடைய பிரிவை தாங்க முடியாமல் திருவாரூர் நகரமே சோகத்தில் முழ்கி ஸ்தம்பித்தது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. அரசு பஸ்கள் அனைத்தும் பணிமனைக்கு கொண்டு வரப்பட்டன.

தி.மு.க. கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிட்டப்பட்டன. பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். முக்கியமான இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதேபோல நாகை மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள் ஓடவில்லை.தொடர்புடைய செய்திகள்

1. தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளது - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
“தி.மு.க.– காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளது“ என்று மதுரையில் அளித்த பேட்டியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
2. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : தேர்தல் கமி‌ஷனில் தி.மு.க. மனு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனில் தி.மு.க. மனு அளித்துள்ளது.
3. தி.மு.க. மாவட்ட பொறுப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
ராமநாதபுரத்தில் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
4. மேகதாது அணை விவகாரம்: சபாநாயகர் அலுவலகத்தில் திடீர் தர்ணா
மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசின் அனுமதியை ரத்துசெய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்ற சிறப்பு சட்டமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகர் அலுவலகத்தில் அ.தி.மு.க.- தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்தி ஒப்புதல்
தமிழக முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்கு சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளார்.