மாவட்ட செய்திகள்

மானாமதுரை அருகே வாலிபரை கத்தியால் குத்திய தாய்–மகன் கைது + "||" + Mother-son arrested for try kill a youngman

மானாமதுரை அருகே வாலிபரை கத்தியால் குத்திய தாய்–மகன் கைது

மானாமதுரை அருகே வாலிபரை கத்தியால் குத்திய தாய்–மகன் கைது
மானாமதுரை அருகே வாலிபரை கத்தியால் குத்திய தாய்–மகனை போலீசார் கைது செய்தனர்.

மானாமதுரை,

சிவகங்கை குமரன் தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகம் மகன் மாரிபாண்டி (வயது 36). இவரிடம் மானாமதுரை பட்டறை தெருவை சேர்ந்தவர் கணேசன்(42) என்பவர் ரூ.1 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். இதற்கிடையில் மாரிபாண்டிக்கும், கணேசன் மனைவிக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கணேசனுக்கு தெரியவர, 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

 இந்தநிலையில் நேற்று மாரிபாண்டி கொடுத்த கடனை வாங்குவதற்காக மானாமதுரை சென்றுள்ளார். அப்போது கணேசனும், அவரது தாயார் காயாம்பு(62) ஆகியோர் சேர்ந்து மாரிபாண்டியை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசன், காயாம்பு ஆகியோரை கைது செய்தனர்.தொடர்புடைய செய்திகள்

1. துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.44 லட்சம் குங்குமப்பூ பறிமுதல்; வாலிபர் கைது
துபாயில் இருந்து சென்னைக்கு ரூ.44 லட்சம் மதிப்புள்ள ஈரான் நாட்டு குங்குமப்பூ மற்றும் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
2. ஆபாச வார்த்தைகளுடன் மாணவியின் புகைப்படத்தை முகநூலில் வெளியிட்ட 2 பேர் கைது
ஆபாச வார்த்தைகளுடன் மாணவியின் புகைப்படத்தை முகநூலில் வெளியிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. மதுக்கடையில் மோதல்: தொழிலாளியை பீர்பாட்டிலால் குத்திய வாலிபர் கைது
வில்லியனூர் அருகே தொழிலாளியை பீர்பாட்டிலால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
4. சூனாம்பேடு அருகே வெளி மாநில மது பாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது
சூனாம்பேடு அருகே வெளி மாநில மது பாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. திருப்பூரில் வாலிபரிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது
திருப்பூரில் வாலிபரிடம் செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.