மாவட்ட செய்திகள்

கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி + "||" + College student killed in the sinking of a well

கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
ஆரணியில் நண்பர்களுடன் குளித்த கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
ஆரணி, ஆரணி அருணகிரிசத்திரம் பாட்ஷா தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் ராகுல் (வயது 19). செய்யாறில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் இவர் தனது நண்பர்களான சைதாப்பேட்டையை சேர்ந்த கார்த்தி (18), லோகநாதன் (18), அருணகிரிசத்திரத்தை சேர்ந்த சதீஷ் (18) ஆகியோருடன் ஆரணி நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார்.

ராகுல் நீச்சல் தெரியாததால் தனது உடலில் ரப்பர் டியூப்பை கட்டிக்கொண்டு குளித்தார். அப்போது திடீரென்று டியூப் விலகிவிட்டதால் அவர் தண்ணீரில் மூழ்கத் தொடங்கினார்.

இதை பார்த்த மற்ற 3 பேரும் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. அதைத்தொடர்ந்து ஆரணி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரில் மூழ்கிய ராகுலை தேடினர். சுமார் ½ மணி நேர தேடுதலுக்கு பிறகு அவர் பிணமாக மீட்கப்பட்டார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஆரணி டவுன் போலீசார் சென்று பார்வையிட்டு ராகுல் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


தொடர்புடைய செய்திகள்

1. பழனி அருகே, அரசு பஸ்சின் சக்கரத்தில் சிக்கி - கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி
பழனி அருகே, அரசு பஸ்சின் சக்கரத்தில் சிக்கி, கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
2. கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 5 பேர் கைது
கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. விடுதி காப்பாளர் இடமாற்றத்துக்கு மாணவர்கள் எதிர்ப்பு
தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கல்லூரி மாணவர் விடுதி காப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் விடுதி மாணவர்கள் உருக்கமான மனு அளித்தனர்.
4. மலைப்பாதையில் சுற்றித்திரிந்த கல்லூரி மாணவர் மாவோயிஸ்டா?
தேவதானப்பட்டி அருகே மலைப்பாதையில் சுற்றித்திரிந்த கல்லூரி மாணவர் மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்தவரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.