பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலை அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை


பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலை அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 9 Aug 2018 3:30 AM IST (Updated: 9 Aug 2018 2:08 AM IST)
t-max-icont-min-icon

வாணாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பயிர்கள் தண்ணீரின்றி கருகுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். அவர்கள் தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

வாணாபுரம், 



வாணாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான பெருந்துறைபட்டு, வாழவச்சனூர், கொட்டையூர், அகரம்பள்ளிப்பட்டு, சின்ன கல்லப்பாடி, பெரியகல்லப்பாடி உள்ளிட்ட பகுதியில் விவசாயமே பிரதானமாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு அதிக அளவில் மழை பெய்ததால் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி நிலத்தடி நீர்மட்டமும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் விவசாயிகள் அதிகளவில் நெல், கரும்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா உள்ளிட்டவைகளை பயிரிட்டு பராமரித்து வந்தனர்.

தற்போது கடும் வறட்சி நிலவும் நிலையில் காற்றும் அதிகமாக வீசுவதால் ஈரப்பதம் குறைந்து நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்துக்கு சென்று விட்டதால் விவசாய பயிர்கள் வாடி வருகிறது. மேலும் மணிலா உள்ளிட்ட பயிர்கள் முழுவதுமாக கருகி வருகின்றது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

எஞ்சிய பயிர்களை மழை பெய்தால்தான் காப்பாற்ற முடியும். எனவே வறட்சியின் காரணமாக காய்ந்து போன கரும்பு, மணிலா, நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story