மாவட்ட செய்திகள்

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது கார் விபத்தில் தி.மு.க. பிரமுகர் பலி + "||" + Karunanidhi When you paid tribute Car crash DMK Dude kills

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது கார் விபத்தில் தி.மு.க. பிரமுகர் பலி

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது கார் விபத்தில் தி.மு.க. பிரமுகர் பலி
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது கார் விபத்தில் தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தாம்பரம், 

விருதுநகர் மாவட்டம் வீரசோழம் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 50). தி.மு.க.வில் கலை இலக்கிய பகுத்தறிவு பாசறை மாவட்ட துணை செயலாளராக இருந்தார். இவர் நேற்றுமுன்தினம் நடந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதே பகுதியை சேர்ந்த கட்சி தொண்டர்கள் 7 பேருடன் காரில் சென்னை நோக்கி வந்தார்.


காரை டிரைவர் ஜெயமுருகன் ஓட்டினார். செங்கல்பட்டை அடுத்த புலிப்பாக்கம் அருகே சென்னை–திருச்சி நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி தடுப்புச்சுவரில் மோதியது.

இதில் மணிவண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த ஜெயமுருகன், பெரியசாமி, மாரிமுத்து, செல்லத்துரை, தங்கபாண்டியன், ஜோசப் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

காயம் அடைந்த 6 பேருக்கும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான மணிவண்ணனுக்கு பாக்யலட்சுமி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.  இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.