மாவட்ட செய்திகள்

சேர்வாரி ஆற்றில் கதவணை மதகுகளை சீரமைக்காததால் ஆற்றுநீர் வீணாக கடலில் கலக்கிறது விவசாயிகள் கவலை + "||" + Farmers are concerned that the river is not in the river

சேர்வாரி ஆற்றில் கதவணை மதகுகளை சீரமைக்காததால் ஆற்றுநீர் வீணாக கடலில் கலக்கிறது விவசாயிகள் கவலை

சேர்வாரி ஆற்றில் கதவணை மதகுகளை சீரமைக்காததால் ஆற்றுநீர் வீணாக கடலில் கலக்கிறது விவசாயிகள் கவலை
பொறையாறு அருகே சேர்வாரி ஆற்றில் கதவணை மதகுகளை சீரமைக்காததால் வீணாக கடலில் ஆற்றுநீர் கலக்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பொறையாறு,

நாகை மாவட்டம், பொறையாறு அருகே தில்லையாடி-திருவிடைக்கழி சாலையில் சேர்வாரி ஆற்றில் பழமையான கதவணை மதகுகள் (ரெகுலேட்டர்) உள்ளது. இதில் 4 மதகுகள் உள்ளன. அதில் 3 மதகுகளின் அடைப்பு பலகைகள் முற்றிலும் சேதமடைந்து உள்ளது. இதனால் சேதமடைந்த மதகுகளில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.


இதன் காரணமாக மகிமலை ஆற்றின் மூலம் 850 ஏக்கர் நிலங்கள் சாகுபடி பெற தேவையான தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டு இருந்தது. இந்த கதவணை மதகுகளின் அடைப்பு பலகைகளை சீரமைத்து தர வேண்டும் என்று தில்லையாடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பினர்.

இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் 24-ந் தேதி தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் சேர்வாரி ஆற்றின் கதவணை மதகுகளை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதில் அளித்த அதிகாரிகள் கதவணை மதகுகள் சரி செய்யப்படும் என்று கூறினர்.

ஆனால், மதகுகளில் தற்போது பெயிண்டு மட்டும் அடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் 30-ந் தேதி காவிரி ஆற்றின் கிளை ஆறான வீரசோழன் மற்றும் மகிமலை ஆற்றிற்கு தண்ணீர் வந்தது. ஆனால் சேர்வாரி ஆற்றில் சேதமடைந்த கதவணை மதகுகளை சீரமைக்காததால் ஆற்றுநீர் வீணாக கடலுக்கு செல்கிறது. எனவே கதவணை மதகுகளின் அடைப்பு பலகைகளை உடனே சீரமைக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த ஆண்டு விவசாயம் கேள்வி குறியாகிவிடும் என விவசாயிகள் கவலையுடன் கூறுகின்றனர்.