மதம் சார்ந்த விழாக்களில், மூடநம்பிக்கையால் குழந்தைகளை உடல்ரீதியாக துன்புறுத்தினால் 3 ஆண்டுகள் சிறை


மதம் சார்ந்த விழாக்களில், மூடநம்பிக்கையால் குழந்தைகளை உடல்ரீதியாக துன்புறுத்தினால் 3 ஆண்டுகள் சிறை
x
தினத்தந்தி 9 Aug 2018 10:15 PM GMT (Updated: 9 Aug 2018 8:26 PM GMT)

மதம் சார்ந்த விழாக்களில் மூடநம்பிக்கையால் குழந்தைகளை உடல்ரீதியாக துன்புறுத்தினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது என கலெக்டர் சுரேஷ் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாகப்பட்டினம்,

மதங்களின் பெயரால் மூட நம்பிக்கை கொண்டு மதம் சார்ந்த விழாக்களில் ஒரு வயது குழந்தையை எரியும் தீ மீது போடப்பட்ட வீடியோ சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பரவி வருகிறது. அதைத்தொடர்ந்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு வந்துள்ள புகாரை தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் யாராவது மதம் சார்ந்த விழாக்களில் மூட நம்பிக்கையால் குழந்தைகளை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தக்கூடாது.

அவ்வாறு துன்புறத்தினால் இளைஞர் நீதிச்சட்டம் 2015 (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) பிரிவு 75-ன் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.

இதுபோன்ற நிகழ்வுகள் குறித்து, குழந்தை சேவை அமைப்பு இலவச தொலைப்பேசி எண். 1098, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தொலைப்பேசி எண். 04365 253018 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story