மாவட்ட செய்திகள்

நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.1¾ லட்சம் வழிப்பறி வாலிபர் கைது + "||" + Rs.1.5 lakhs robot arrested for financial institution employees

நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.1¾ லட்சம் வழிப்பறி வாலிபர் கைது

நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.1¾ லட்சம் வழிப்பறி வாலிபர் கைது
நிதி நிறுவன ஊழியரை தாக்கி அவரிடம் இருந்த ரூ.1¾ லட்சத்தை வழிப்பறி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை, மதுரை அருகே உள்ள ஒத்தக்கடை இந்திரா காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் அசோக்குமார் (வயது 24). இவர் மதுரையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவர், மோட்டார் சைக்கிளில் பணம் வசூல் செய்வதற்காக சென்றார். ஒத்தக்கடை அருகே உள்ள பட்டணம், ஜோதியபட்டி, பஞ்சாங்கி பட்டி, கட்ட முத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பணம் வசூல் செய்துவிட்டு மீண்டும் ஒத்தக்கடை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

கண்டமுத்துபட்டி-சின்னமங்கலம் சந்திப்பு பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் அவரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் அசோக்குமாரிடம் செல்போனை தருமாறு மிரட்டி உள்ளனர். இதற்கு அவர் மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மர்மநபர்கள், அவரை தாக்கி அவர் வைத்திருந்த பணப்பை மற்றும் செல்போனை பறித்து விட்டு தப்பி சென்றனர். அந்த பையில் ரூ. 1 லட்சத்து 87 ஆயிரத்து 100 இருந்ததாக அசோக்குமார் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ஒத்தக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரகுரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது கடச்சனேந்தல் பகுதியை சேர்ந்த பிரவீன் (20), முருகானந்தம் (19) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் தலைமறைவாக இருந்த முருகானந்தத்தை கைது செய்தனர். பிரவீனை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து பணம், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மதுரை புறநகர் பகுதி களான ஒத்தக்கடை, ஊமச்சிகுளம், சிலைமான் பகுதிகளில் நாளுக்கு நாள் வழிப்பறி சம்பவங்கள் அதிரித்து வருகின்றன. இதனை தடுக்கும் விதமாக போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் வழிப்பறி சம்பவங்கள் குறைந்தபாடில்லை. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும், இரவு நேரங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. திருச்செந்தூரில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது 28 பவுன் நகைகள் மீட்பு
திருச்செந்தூரில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 28 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன.
2. இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது
இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
3. போடியில், திருட்டு வழக்கில் வாலிபர் கைது; 16 பவுன் நகைகள் மீட்பு
போடியில் திருட்டு வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் 16 பவுன் நகை மீட்கப்பட்டது.
4. தேனி டிரைவரை தாக்கி கார் கடத்தல் வாலிபர் கைது
தேனியை சேர்ந்த டிரைவரை தாக்கி காரை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
5. மனைவியின் ஆபாச படங்களை வெளியிடுவேன் என தொழிலாளியிடம் மிரட்டல் - வாலிபர் கைது
மனைவியின் ஆபாச படங்களை வெளியிட்டு விடுவேன் என தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.