ஆடி அமாவாசையையொட்டி குமரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை கலெக்டர் அறிவிப்பு


ஆடி அமாவாசையையொட்டி குமரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Aug 2018 10:30 PM GMT (Updated: 9 Aug 2018 10:01 PM GMT)

ஆடி அமாவாசையையொட்டி குமரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவித்துள்ளார்.

நாகர்கோவில்,

ஆடி மாத அமாவாசை தினம் இந்துக்களின் முக்கிய தினமாக கருதப்படுகிறது. இந்த நாளில் தங்களது முன்னோர்கள் நினைவாக அவர்கள் கடல், ஆறுகள் போன்ற நீர்நிலைகளில் பலிகர்ம பூஜை நடத்துவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை தினம் நாளை (சனிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி குமரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆணை பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆடி அமாவாசையொட்டி குழித்துறை நகராட்சியால் நடத்தப்படும் வாவுபலி தினத்தை முன்னிட்டு நாளை குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்த உள்ளுர் விடுமுறைக்கு ஈடாக அடுத்த மாதம் (செப்டம்பர்) இரண்டாவது சனிக்கிழமை (8-9-2018) அன்று குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.

நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story