ரெயில்வே கேட் பகுதியில் பொது மக்களுக்கு இடையூறாக தகராறு செய்த 3 பேர் கைது
ஆதனூர் ரெயில்வே கேட் பகுதியில் பொது மக்களுக்கு இடையூறாக தகராறு செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நீடாமங்கலம்,
நீடாமங்கலம்- தஞ்சாவூர் சாலையில் ஆதனூர் ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்கேட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் நின்று கொண்டு சாலை போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் சிலர் தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்து வருவதாக நீடாமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு நின்ற 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் முன்னாவல்கோட்டை கிராமத்தை சேர்ந்த ரவி (வயது 25), நகர் கிராமம் மேலத்தெருவை சேர்ந்த சரவணன் (25), அதே பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியம் (25) என்பதும், இவர்கள் 3 பேரும் சாலையில் நின்று தகராறு செய்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவி, சரவணன், சிவசுப்பிரணியம் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story