தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு


தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 11 Aug 2018 3:20 AM IST (Updated: 11 Aug 2018 3:20 AM IST)
t-max-icont-min-icon

லால்குடி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 8 பவுன் நகை மற்றும் ரூ. 6 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

லால்குடி, 



திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கொன்னைக்குடி மேலத் தெருவைச் சேர்ந்தவர் வின்சென்ட் (வயது52). தனியார் நிறுவன ஊழியர். நேற்று காலை வின்சென்ட் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு சாவியை வழக்கம்போல் ஜன்னல் அருகே செருப்புகள் வைக்கும் ஸ்டாண்டில் அங்கிருந்த ஒரு ஷூவுக்குள் மறைத்து வைத்து விட்டு சென்றனர். பின்னர் மாலை வீடு திரும்பிய வின்சென்ட் மனைவி கரோலின் ஆரோக்கிய மேரி சாவியை எடுத்து வீட்டை திறந்து பார்த்தார்.

அப்போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த உடைகள் வெளியே சிதறிக் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். சாவி வைத்திருக்கும் இடத்தை மர்ம நபர்கள் நோட்டமிட்டு வீட்டை திறந்து பீரோவில் இருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ. 6 ஆயிரத்தை திருடி விட்டு, பின்னர் வீட்டை பூட்டி விட்டு சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில் லால்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

Next Story