மாவட்ட செய்திகள்

சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் வண்டிவேடிக்கை நிகழ்ச்சி + "||" + Salam Amma Belt At Sengundar Mariamman temple Carriage show

சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் வண்டிவேடிக்கை நிகழ்ச்சி

சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் வண்டிவேடிக்கை நிகழ்ச்சி
சேலம் அம்மாபேட்டையில் உள்ள செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருவிழா கடந்த மாதம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
சேலம்,

தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இந்தநிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வண்டிவேடிக்கை நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது.

இதில் விஸ்வகர்மா இளைஞர் குழு சார்பில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, விஸ்வகர்மா, காயத்ரி ஆகிய கடவுள்களின் வேடமணிந்து பக்தர்கள் வீதி உலா வந்தனர். இதை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.


விழாவையொட்டி அம்மாபேட்டை காந்தி மைதானத்தில் செங்குந்தர் உடற்பயிற்சி சங்கம் சார்பில் வீர விளையாட்டுகள் நடைபெற்றது. இதில் வேல்முருகன் என்பவரது மார்பின் மீது உரல் வைத்து பெண்கள் மாவு இடித்தனர். இதுதவிர ராஜா என்பவரது மார்பின் மீது கல் வைக்கப்பட்டு சம்மட்டியால் அடித்து உடைக்கப்பட்டது.

மேலும் சிலம்பாட்டம், நெருப்பு வளையத்தில் பாய்தல் உள்ளிட்ட சாகச விளையாட்டுகள் நடத்தப்பட்டது. இதை ஏராளமானவர்கள் பார்த்து ரசித்தனர்.