தாவூத் இப்ராகிமின் கட்டிடம் ரூ.3½ கோடிக்கு ஏலம் போனது


தாவூத் இப்ராகிமின் கட்டிடம் ரூ.3½ கோடிக்கு ஏலம் போனது
x
தினத்தந்தி 10 Aug 2018 11:24 PM GMT (Updated: 10 Aug 2018 11:24 PM GMT)

மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம்.

மும்பை,

தாவூத் இப்ராகிம் இதுமட்டும் இல்லாமல் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வருபவர். இவர் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

மும்பையில் இருக்கும் இவருக்கு சொந்தமான சொத்துகளை, சொத்து பறிமுதல் சட்டத்தின் கீழ் மத்திய அரசின் நிதித்துறை ஏலத்திற்கு விட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தென்மும்பை பென்டிபஜார் பகுதியில் உள்ள தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமான 4 மாடி கட்டிடம் நேற்று முன்தினம் ஏலத்திற்கு விடப்பட்டது. இதன் ஆரம்ப விலை ரூ.79 லட்சத்து 43 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டது.

முடிவில் மும்பையை சேர்ந்த சபீ புர்கானி அப்லிப்ட்மெண்ட் என்ற தனியார் அறக்கட்டளை ரூ.3 கோடியே 51 லட்சத்திற்கு இந்த கட்டிடத்தை ஏலத்திற்கு எடுத்தது. 

Next Story