வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்ததாக தாய்-மகள் மீது வழக்குப்பதிவு


வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்ததாக தாய்-மகள் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 12 Aug 2018 3:45 AM IST (Updated: 12 Aug 2018 2:37 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் அருகே வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்ததாக தாய்-மகள் மீது வழக்குப்பதிவு.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் மேலத்தெருவை சேர்ந்த சுப்ரமணியன் மனைவி சுசீலா. இவர்களது மகள் கலைவாணி. இவரது கணவர் சுரேஷ் துபாய் நாட்டில் தனியாக நிறுவனம் வைத்து தொழில் செய்து வருவதாகவும், அதில் நல்ல லாபம் கிடைப்பதாகவும், எங்களது நிறுவனத்தில் பங்குதாரராக இணைய ரூ.5 லட்சம் முதலீடு செய்தால், அதில் கிடைக்கும் லாபத்தில் பாதி தொகையாக வழங்கப்படும் என்றும், பின்னர், நீங்கள் கொடுத்த பணத்துக்கு இரட்டிப்பு பணம் வழங்கப்படும் என்றும் சுசீலாஅவரது மகள் கலைவாணி ஆகியோர் பெரம்பலூர் மாவட்டம் லாடபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் பாலமுருகன் (வயது 33) என்பவரிடம் கூறியதாக தெரிகிறது. இதை நம்பிய பாலமுருகன் கடந்த ஆண்டு ரூ.5 லட்சத்தை கலைவாணி மற்றும் சுசீலாவிடம் வழங்கினா ராம். ஆனால், பணம் கொடுத்து பல மாதங்கள் கடந்தும், நிறுவனத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தை கேட்கும்போது தர மறுத்ததாக கூறப்படுகிறது. பின்னர், சுசீலா, கலைவாணி ஆகியோரை நேரிலும், தொலைபேசி மூலமாகவும் பலமுறை தொடர்புகொண்டு பணத்தை கேட்டபோது தர மறுத்து, அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதையடுத்து, தன்னை ஏமாற்றி ரூ.5 லட்சம் பண மோசடி செய்த கலைவாணி, அவரது தாய் சுசீலா ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து, கொடுத்த பணத்தை திரும்பப் பெற்றுத்தரக்கோரி பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் பாலமுருகன் ஒரு புகார் மனு அளித்தார். அதன்பேரில் போலீசார் சுசீலா, அவரது மகள் கலைவாணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story