மாவட்ட செய்திகள்

தஞ்சையில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து பணம்– நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு + "||" + Thanjani Dancer: Break the house lock - money laundered

தஞ்சையில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து பணம்– நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

தஞ்சையில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து பணம்– நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
தஞ்சையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை– பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்,

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஜமால்உசேன் நகர் 2–ம் தெரு பாப்பாநகர் விரிவாக்கத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது37). இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவருடைய தந்தை ராமையன். தாயார் சேதம்மாள். முருகானந்தத்துக்கு மலர்விழி என்ற மனைவியும், பவித்ரன் என்ற மகனும் உள்ளனர்.

மலர்விழி தனது மாமனார், மாமியார் மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் ஆடிஅமாவாசை என்பதால் ராமையனும், சேதம்மாளும் ஒரத்தநாட்டில் உள்ள கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்று விட்டனர். இதையடுத்து இரவு மலர்விழியும், பவித்ரனும், அருகில் உள்ள தனது உறவினர் வீட்டில் இரவு தங்கினர்.

நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 பவுன் நகை மற்றும் வெள்ளி கொலுசுகள், வீடு கட்டியதற்காக வாங்கிய கடனை கட்டுவதற்காக வைத்திருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போனது தெரிய வந்தது.

இது குறித்து ராமையன் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.தொடர்புடைய செய்திகள்

1. மணல் திருட்டு வாகனங்கள் விடுவிக்கப்படாது என்ற உத்தரவு நீடிக்கும் - மதுரை ஐகோர்ட்டு அதிரடி
மணல் திருட்டின் போது பிடிபடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்ற உத்தரவு நீடிக்கும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
2. கோவை கரும்புக்கடையில் கேபிள் டி.வி. ஆபரேட்டர் வீட்டில் 65 பவுன் நகை, பணம் திருட்டு
கோவை கரும்புக்கடையில் கேபிள் டி.வி. ஆபரேட்டர் வீட்டில் 65 பவுன் நகை மற்றும் பணம் திருட்டு போனது.
3. வத்தலக்குண்டு அருகே கன்னிமார் கோவிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு; கிராம மக்கள் போராட்டம்
வத்தலக்குண்டு அருகே கன்னிமார் கோவிலில் ஐம்பொன் சிலைகள் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. காஞ்சீபுரம் பகுதிகளில் திருட்டு வழக்குகளில் 2 பேர் கைது
காஞ்சீபுரம் பகுதிகளில் திருட்டு வழக்குகளில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மீட்கப்பட்டது.
5. சென்னிமலை அருகே கடையின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் செல்போன் திருட்டு; 3 வாலிபர்கள் கைது
சென்னிமலை அருகே கடையின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான செல்போனை திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து ஜீப்பையும் பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை