கருணாநிதி மறைவையொட்டி தி.மு.க.வினர் மவுன ஊர்வலம்


கருணாநிதி மறைவையொட்டி தி.மு.க.வினர் மவுன ஊர்வலம்
x
தினத்தந்தி 13 Aug 2018 4:00 AM IST (Updated: 13 Aug 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

கருணாநிதி மறைவையொட்டி ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தில் ஆண்டிமடம் தெற்கு ஒன்றியம் தி.மு.க.வினர் சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.

ஜெயங்கொண்டம்,

கருணாநிதி மறைவையொட்டி ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தில் ஆண்டிமடம் தெற்கு ஒன்றியம் தி.மு.க.வினர் சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. வாரியங்காவல் பஸ் நிறுத்தத்திலிருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக இலையூர் பஸ் நிறுத்தத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ஊர்வலத்திற்கு ஒன்றிய செயலாளர் தர்மதுரை தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் தில்லைகாந்தி, ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ரெங்கமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர்தொண்டரணி அமைப்பாளர் பானுமதி ராஜேந்திரன் வரவேற்றார். இதில் செல்ல மணிமாறன், இளவரசன், புலவர் பரமசிவம், கிரேஸ் சுப்பிரமணியன், சிவமுத்து மயில்வாகணன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story