மகாலிங்கசாமி கோவில் ஆடிப்பூர அம்மன் தேரோட்டம் தேரில் இருந்த கலசம் கீழே விழுந்ததால் பரபரப்பு
திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோவில் ஆடிப்பூர அம்மன் தேரோட்டம் நடைபெற்றது. இதில் தேரில் இருந்த கலசம் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவிடைமருதூர்,
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் மகாலிங்கசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிப்பூர மகோத்சவ விழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. 9-ம் நாள் விழாவான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக 86 ஆண்டுகளுக்கு பிறகு அம்மனுக்கு என்று அமைக்கப்பட்ட 45 அடி உயரமுள்ள இரும்பிலான புதிய தேரில் அம்மன், விநாயகர், வள்ளி தேவசேனா முருகப்பெருமான் மற்றும் சண்டிகேஸ்வரர் எழுந்தருளினர்.
இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தேர் புறப்பட்ட சிறிது நேரத்தில் தேரில் இருந்த கலசமும், அதற்கான குடையும் கீழே விழுந்ததால் தேரோட்டம் அரைமணி நேரம் தடைப்பட்டது. பின்னர் தேரில் கலசம் பொருத்தப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று தேர்நிலையை அடைந்தது.

Related Tags :
Next Story