வாய்மேட்டில் சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள காலாவதியான மருந்து, மாத்திரைகளால் சுகாதார சீர்கேடு


வாய்மேட்டில் சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள காலாவதியான மருந்து, மாத்திரைகளால் சுகாதார சீர்கேடு
x
தினத்தந்தி 13 Aug 2018 4:15 AM IST (Updated: 13 Aug 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

வாய்மேட்டில் சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள காலாவதியான மருந்து, மாத்திரைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாய்மேடு,

நாகை மாவட்டம் வாய்மேட்டில் உள்ள திருத்துறைப்பூண்டி மெயின் சாலையில் காலாவதியான மாத்திரைகள், மருந்துகள், ஊசிகள், பாலிதீன் பைகள் உள்ளிட்டவைகளை சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ளது. இந்த குப்பைகள் பல நாட்களாக அள்ளப்படாமல் அங்கேயே கிடப்பதால் குப்பைமேடு போல காட்சியளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பை மேடாக உள்ள சாலையோரத்தின் அருகே ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு சிகிச்சைக்காக நாள் தோறும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். அப்போது அவர்களுக்கு தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் இந்த சாலை வழியாக தான் சென்று வருகின்றனர். எனவே சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்து சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள காலாவதியான மருந்து, மாத்திரைகள், ஊசிகள் மற்றும் பாலிதீன் பைகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story