ஜனநாயக மாதர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்


ஜனநாயக மாதர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 14 Aug 2018 4:00 AM IST (Updated: 13 Aug 2018 10:17 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து, சுமதா தேவியை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியிருந்தனர். வெள்ளிச்சந்தை சந்திப்பு பகுதியில் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

நாகர்கோவில்,

வெள்ளிச்சந்தை பகுதியில் உள்ள ஒரு கோவில் கும்பாபிஷேகத்தின் போது நடைபெற்ற திருட்டு தொடர்பாக சுமதா தேவி (வயது 28)  என்பவரை போலீசார் தாக்கியதாகவும், இதனால் சுமதா தேவி ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் 6 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்றதாகவும், இந்த திருட்டு வழக்கில் சுமாதேவிக்கு தொடர்பு இல்லை என்றும், தற்போது அந்த  வழக்கில் வேறு பெண்களை போலீசார் கைது செய்திருப்பதாகவும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் புகார் கூறி வந்தனர்.

மேலும் அவர்கள் இதுதொடர்பாக நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து, சுமதா தேவியை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியிருந்தனர். வெள்ளிச்சந்தை சந்திப்பு பகுதியில் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

இந்தநிலையில் சுமதாதேவியை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க குருந்தன்கோடு ஒன்றிய குழு சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. காலையில் தொடங்கிய இந்த போராட்டம் பிற்பகல் வரை நடைபெற்றது.

போராட்டத்துக்கு ஒன்றிய குழு தலைவர் அன்புச்செல்வி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் அல்போன்சா, பொருளாளர் சவிதா, செயலாளர் ரெகுபதி, மாநில செயற்குழு உறுப்பினர் உஷா பாசி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றையும் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தனர். தூரல் மழையையும் பொருட்படுத்தாமல் பெண்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

Next Story