கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் கலெக்டரிடம் மனு


கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 14 Aug 2018 4:30 AM IST (Updated: 14 Aug 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

மங்களம் கிராமத்தில் பல்வேறு கோரிக்கை களை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வில்லையெனில் வருகிற 30-ந்தேதி பானை உடைக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று கலெக்டரிடம், கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதி காரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினர். அப்போது வேப்பந்தட்டை தாலுகா ரஞ்சன்குடி அருகே உள்ள தேவையூர் ஊராட்சிக்கு உட்பட்ட மங்களம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வந்து கலெக்டரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய ஒரு மனுவை அளித்தனர். அதில் மங்களம் கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

மங்களம் கிராமத்தில் உள்ள பழுதடைந்துள்ள 10 கை அடிபம்புகளை சரி செய்து தர வேண்டும். குடிநீர் தொட்டி, கிணறு, வீட்டிற்கு குடிநீர் குழாய் அமைத்து தர வேண்டும். 5 ஆயிரம் பேர் வசிக்கும் கிராமத்தில் ரேஷன் கடையை 2-ஆக பிரித்து தர வேண்டும். மயானத்திற்கு செல்வதற்கு பாதை அமைத்து தரவேண்டும். தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை யினை வழங்க வேண்டும்.

கிராமத்தில் பழுதடைந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கிராம மக்கள் பலமுறை மனுக்கள் கொடுக்கப்பட்டு, இதுநாள் வரையிலும் நடவடிக்கை எடுத்தபா டில்லை. மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கை கள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை யெனில் மாவட்ட நிர்வாகத்தை கண் டித்து வருகிற 30-ந்தேதி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மங்கள மேடு பகுதியில் மங்களம் கிரா மத்தில் வசிக்கும் அனைத்து பொதுமக்களையும் திரட்டி பானை உடைக்கும் போராட் டம் நடத்தப்படும் என்றும் கூறியிருந்தனர்.

துறைமங்கலம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், துறைமங் கலம் பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளி யேற்றம் நிலையம் உள்ளது. தற்போது பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறி விவசாய நிலங்களுக்கு புகுந்து விடுகிறது. மேலும் குழாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குடி நீருக்காக பயன்படுத்தப் படும் கிணறுகளில் புகுந்து விடுவ தால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்த னர்.

மக்கள் நீதி மய்யத்தின் பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் முத்துக்குமார் தலைமையில் அக்கட்சியினர் கொடுத்த மனுவில், பெரம்ப லூர் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தை முறையாக நடத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தமிழ் மாணிக்கம் தலைமையில் வேப்பந்தட்டை தாலுகா கடம்பூர் பகுதியில் வசிக்கும் மக்கள் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில் கடம்பூரில் உள்ள அம்மன் கோவில் ஒன்றில் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த கோவிலில் உள்ள ஒரு சாமியை நாங்கள் கும்பிடுவது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல் இந்த ஆண்டும் அந்த சாமியை கும்பிடுவதற்கு வாழை மரம் கட்டி மரியாதை செலுத் தினால், அந்தப்பகுதியில் உள்ள மற்றொரு தரப்பினர் எங்களை சாமி கும்பிட விடாமல் தடுத்து வருகின்றனர். எனவே எங்களுக்கு அந்த சாமியை கும்பிடுவதற்கு அனு மதியும், பாதுகாப்பும் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சாந்தா விசாரணை செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப் படும் என்றார். 

Next Story