சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்க வேண்டும் சங்க கூட்டத்தில் தீர்மானம்
சாலையோர வியா பாரிகளுக்கு வங்கி கடன் வழங்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருத்துறைப்பூண்டி,
திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தை சார்ந்த சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் ஊர்வலமும், ஆண்டு பேரவை கூட்டமும் நேற்று நடந்தது. புதிய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்துக்கு சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் நகர தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ரமேஷ், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாவட்ட தலைவர் பாண்டியன், ஆட்டோ சங்க முன்னாள் மாவட்ட தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. பின்னர் முத்துப்பேட்டை சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் ஆண்டுபேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
திருவாரூர்-பட்டுக்கோட்டை வரையிலான அகல ரெயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்க வேண்டும். வீடு கட்ட இடம் ஒதுக்கி, கான்கிரீட் வீடு கட்டி தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. இதில் சாலையோர வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story