திருத்துறைப்பூண்டி அருகே கோவிலின் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் பொருட்கள் திருட்டு


திருத்துறைப்பூண்டி அருகே கோவிலின் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 14 Aug 2018 3:45 AM IST (Updated: 14 Aug 2018 1:17 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி அருகே சாமி கும்பிட வந்தது போல் நடித்து கோவிலின் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணலி சாத்தங்குடி சாலையில் கண்ணாயிரமூர்த்தி அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று முன்தினம் மதியம் ஒரு காரில் 2 ஆண்களும், ஒரு பெண்ணும் சாமி கும்பிடுவது போல் வந்துள்ளனர். பின்பு கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 5 கிலோ பித்தளை மணி, கைமணி, குடம், ஒலிபெருக்கி சாதனம், குத்து விளக்கு, தொங்குவிளக்கு என ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து கோவில் நிர்வாகி நாகலிங்கம் திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன், சப்-இன்ஸ்பெக்டர் வல்லவராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் சாமி கும்பிட வந்தது போல நடித்து பித்தளை உள்ளிட்ட பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story