பொதுமக்கள், காவல்துறை நல்லுணர்வு விழிப்புணர்வு முகாம்
திருமானூர் அருகேயுள்ள கீழையூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார் உத்தரவின் பேரில் கீழப்பழுவூர் போலீசார் சார்பில் பொதுமக்கள், காவல்துறை நல்லுணர்வு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திருமானூர்,
திருமானூர் அருகேயுள்ள கீழையூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார் உத்தரவின் பேரில் கீழப்பழுவூர் போலீசார் சார்பில் பொதுமக்கள், காவல்துறை நல்லுணர்வு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கீழப்பழுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா தலைமை தாங்கினார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமரஜோதி வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) மேகலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், பெற்றோர்கள் குழந்தைகளுடன் அதிக நேரங்களை செலவிட வேண்டும். நல்ல பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுத்தல் வேண்டும். அவர்களின் மனதில் உள்ளதை பெற்றோர்கள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். அதுபோல், தெரியாத நபர்களிடம் பெண்களோ, பெண் குழந்தைகளோ பேசுவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் சொல்வதை பெற்றோர்கள் அலச்சிய படுத்தக்கூடாது. பெண் குழந்தைகள், தங்களிடம் பழகுபவர்கள் நல்லவர்களாக இருந்தாலும், தீயவர்களாக இருந்தாலும் பெற்றோரிடம் அவசியம் சொல்லிவிட வேண்டும் என்றார். இதில் போலீசார், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story