சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு


சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 13 Aug 2018 10:00 PM GMT (Updated: 13 Aug 2018 8:45 PM GMT)

சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் அணைகள், வழிபாட்டுத்தலங்கள், பஸ் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

தேனி,


நாடு முழுவதும் நாளை (புதன்கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தேனி மாவட்டத்திலும் பலத்த பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

வைகை அணை, மஞ்சளாறு அணை உள்ளிட்ட அணைகளிலும், வழிபாட்டுத்தலங்கள், சுற்றுலா இடங்கள், பஸ் நிலையங்கள் உள்பட பொதுமக்கள் கூடும் இடங்களிலும் கூடுதல் எண்ணிக்கையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதுபோன்ற இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் சோதனை நடத்தி வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் சுமார் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா தேனியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இதில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றி வைக்கிறார். விழாவில் ஏராளமான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்குகிறார். பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழா நடக்கும் விளையாட்டு அரங்கில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.
இந்த விழாவுக்காக ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். மாணவ, மாணவிகளும் கலை நிகழ்ச்சி ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

சோதனை சாவடிகளில் போலீசார் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர். தங்கும் விடுதிகளில் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் தங்கி உள்ளார்களா? என்றும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 

Next Story